எமிஸ் இணையத்தில் மதிப்பெண் : இது, பெருந்தொற்று காலத்துக்கு ஏற்பாடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 30, 2020

எமிஸ் இணையத்தில் மதிப்பெண் : இது, பெருந்தொற்று காலத்துக்கு ஏற்பாடு

 எமிஸ் இணையத்தில் மதிப்பெண் : இது, பெருந்தொற்று காலத்துக்கு ஏற்பாடு


பெருந்தொற்று காலங்களில், மாணவர்களின் ரிசல்ட் வெளியிடுவதில், ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வாக, அனைத்து வகை பள்ளி மாணவர்களின் தேர்வு மதிப்பெண்களும், எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.


ஊரடங்கு காரணமாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 இறுதித்தேர்வு ரத்து செய்யப்பட்டது. பள்ளி தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவு அடிப்படையில், பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியிடப்பட்டது.

இதில், சில தனியார் பள்ளிகள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. குறிப்பாக, ஊரடங்கு சமயத்தில், மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கி, வீட்டிலே தேர்வெழுதி, பெற்றோர் மூலம் பள்ளியில் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக, புகார்கள் வெளியாகின.


இதை பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடும் மையத்தில் சமர்ப்பித்ததால், கல்வியில் பின்தங்கியோர் கூட, அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.இதே சமயம், பள்ளி தேர்வுகளில், கடுமையான மதிப்பீட்டு முறை பின்பற்றுவதால், சிறப்பாக படிக்கும் மாணவர்களுக்கு கூட, குறைந்த மதிப்பெண்களே வழங்கப்பட்டன.

இம்மதிப்பெண்களே பொதுத்தேர்வுக்கும் கணக்கிடப்பட்டதால், தற்போது குறைந்த மதிப்பெண்களே கிடைத்துள்ளதாக, சில பெற்றோர் விரக்தியுடன் தெரிவித்தனர்.இது சார்ந்து, அந்தந்த பள்ளிகள் மூலம் தேர்வுத்துறைக்கு அதிக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதனால், பெருந்தொற்று காலங்களை சமாளிக்கும் வகையிலும், மாணவர்களின் கற்றல் நிலையை ஆய்வு செய்யவும், அனைத்து வகை பள்ளி மாணவர்களின் மதிப்பெண்களும் வரும் காலங்களில், பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை முறைமை(எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment