ஐ.டி.ஐ.,களில் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, August 30, 2020

ஐ.டி.ஐ.,களில் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு

 ஐ.டி.ஐ.,களில் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2020~21ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 


கலெக்டர் அண்ணா துரை செய்திக்குறிப்பு:அரசு தொழிற் பயிற்சி நிலையம், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2020~21ம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன

. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 10ம் வகுப்பு, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வரும் செப்டம்பர் 15ம் தேதி வரை விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம்.மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விபரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும். 


விழுப்புரம் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் திண்டிவனம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும், அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்களை அறிய www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தினை பார்க்கலாம்


.விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் போது தங்களது அசல் ஆவணங்களான மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதம் தோரும் 500 ரூபாய் உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பாட புத்தகம், காலணி, சீருடை, வரைபடக்கருவிகள் ஆகியவை வழங்கப்படுகிறது.

மேலும், பயிற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங் உதவித்தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பெரிய தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கு ஏற்பாடு செய்து தரப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment