ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறையை பின்பற்றாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி - Minnal Kalvi Seithi

Breaking

Monday, August 24, 2020

ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறையை பின்பற்றாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

 ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறையை பின்பற்றாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறையை பின்பற்றாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?  என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.


 கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் மாணவர்களின் படிப்புகள் என்னவாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 


எனினும், மாணவர்களின் எதிர்காலம் கருதி இணையத்தளம் மூலமாக கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு சார்பாக தொலைக்காட்சி வாயிலாகவும் படிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இணையதள வகுப்புகளை தடை செய்ய கூறியும், தனியார் பள்ளிகளில் அதிகளவு கட்டணம் வசூல் செய்வது தொடர்பாகவும் புகார் எழுந்தது.


இதையடுத்து, ஆன்லைன் வகுப்புகளுக்கு உரிய கட்டுப்பாடுகள் வக்குகக்கோரி சரண்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கானது நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.


அப்போது, அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத், உலகம் முழுவதுமே ஆன்லைன் மூலம்தான் தற்போது வகுப்புகள் நடைபெறுவதாகத் தெரிவித்தார். 


அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் இணையதள வகுப்புகள் நடைபெற்று வந்தாலும், ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு தொலைக்காட்சிகள் மூலமாக பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டு வந்தாலும், மலைப்பகுதியில் வாழும் மக்களின் கல்விக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? மலைப் பகுதியில் வசிக்கக்கூடிய குழந்தைகளுக்கு எப்படி ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன?


ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும்போது அவர்களுக்கு எப்படிப் பாடங்கள் நடத்தப்படுகின்றன? பதிவு செய்து அனுப்பப்படுகிறதா? என கேள்வியெழுப்பினர்.


 மேலும், ஆன்லைன் வகுப்பு தொடர்பான விதிமுறைகளை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறதா? ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறையை பின்பற்றாத தனியார் பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? தனியார் பள்ளிகளுக்கும் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் வகுப்பு நடத்த முடியுமா? என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

 இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும், என உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து, இவ்வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment