மாணவரை தேடி சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, August 24, 2020

மாணவரை தேடி சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்

 மாணவரை தேடி சென்று பாடம் நடத்தும்  அரசு பள்ளி தலைமை ஆசிரியர்

மாணவர்களை தேடிச் சென்று பாடம் நடத்தும், அரசு பள்ளி தலைமைஆசிரியரை அனைவரும் பாராட்டுகின்றனர்.


ஊரடங்கு காரணமாக, பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. கிராமப்புற மாணவர்கள், கல்வி கற்பதில் சிரமம் இருக்கிறது.திருப்பூர் அருகே, செஞ்சேரிபுத்துார் அரசு துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், மாணவர்களை தேடி சென்று, பாடம் நடத்தி வருகின்றார். 

அவர் கூறியதாவது: கூலித்தொழில் செய்து, வாழ்க்கை நடத்தி வரும் பெற்றோர், தங்களின் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்காமல் போய் விடுமோ என்ற வேதனையில் இருந்தனர்.


இதனால், கோவில், மற்றும் பொது இடங்களுக்கு சென்று, வாரம் ஒரு முறை, மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறேன். சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்தபடி, அருகருகே இருக்கும் மாணவர்களை ஒன்று சேர்த்து, பாடம் கற்பிக்கிறேன்.

 பெற்றோரும் ஒத்துழைப்பு தருவதால், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் படிக்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.இவரை, பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment