கட்டணம் இன்றி கல்லூரி படிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, August 24, 2020

கட்டணம் இன்றி கல்லூரி படிப்பு

 கட்டணம் இன்றி கல்லூரி படிப்பு

தனியார் கல்லூரி ஒன்று, கல்வி கட்டணமின்றி பட்டப்படிப்பில் சேர, மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.


தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஏனாதியில், 'ஏனாதி ராஜப்பா கலை, அறிவியல் கல்லூரி' இயங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், பயின்று வருகின்றனர்.


இக்கல்லூரியில், இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளுக்கு, 2020 -- 2021ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. கொரோனா தாக்கத்தால், டெல்டா மாவட்டங்களில், ஏராளமான குடும்பங்களில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், மாணவர்களின் மேற்படிப்பு பாதித்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில், 2020- - 2021ல், ஓராண்டு கல்வி கட்டணம் இன்றி, மாணவர்கள் பட்டப் படிப்புகளில் சேரலாம் என, நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.


இணையதளம் வழியாக மாணவர் சேர்க்கை நடக்கிறது. 'மேலும், தகவலுக்கு, 0437 - 3-223730 என்ற தொலைபேசி எண்ணிலும், www.enathirajappac0llege.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment