ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சிக் காலத்தை நிரந்தரமாக்குவது பற்றி ஆய்வு: அமைச்சர் செங்கோட்டையன் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, August 27, 2020

ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சிக் காலத்தை நிரந்தரமாக்குவது பற்றி ஆய்வு: அமைச்சர் செங்கோட்டையன்

 ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சிக் காலத்தை நிரந்தரமாக்குவது பற்றி ஆய்வு: அமைச்சர் செங்கோட்டையன்


ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தேர்ச்சிக் காலத்தை நிரந்தரமாக்குவது குறித்து அரசு ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ''10-ம் வகுப்புத் தனித்தேர்வர்களின் தேர்ச்சி குறித்து முதல்வர்தான் அறிவிக்க வேண்டும்.


ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தேர்ச்சிக் காலம் 7 ஆண்டுகள் வரைதான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை நிரந்தரமாக்குவது பற்றி அரசு ஆய்வு செய்thu அறிவிக்கும்.


நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு நிலுவையில் உள்ளது. பிரதமரிடமும் முதல்வர் இதுகுறித்துத் தெளிவாகக் கூறியுள்ளார்.


அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கும் சிறப்பான கல்வி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10 ,12-ம் வகுப்புச் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இணையம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

No comments:

Post a Comment