என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாள் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, August 19, 2020

என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாள்

 என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாள்

என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த 16-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 834 பேர் என்ஜினீயரிங் படிப்பில் சேர விருப்பம் தெரிவித்து விண்ணப்பப்பதிவு செய்து இருந்தனர். 


இது கடந்த ஆண்டு விண்ணப்பப்பதிவை காட்டிலும் 20 சதவீதம் அதிகம் ஆகும். ஆனால் விண்ணப்பப்பதிவு செய்தவர்களில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி இருந்தனர். விண்ணப்பக்கட்டணத்தை செலுத்தியவர்கள் அடுத்ததாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டும். அதன்படி, அவர்கள் தங்களுடைய சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.


அந்தவகையில் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இன்று (வியாழக்கிழமை) கடைசிநாள் ஆகும். நேற்று மாலை நேர நிலவரப்படி ஒரு லட்சத்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment