தனித்தேர்வர்களுக்குத் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, August 19, 2020

தனித்தேர்வர்களுக்குத் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு

 தனித்தேர்வர்களுக்குத் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு

செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித்தேர்வர்களிடமிருந்து முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:


முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக கீழ்க்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும்


மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெப் கேமரா வழியாகப் புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால், அந்நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்து கொண்ட பின்னர் அங்கேயே தேர்வுக் கட்டணம் செலுத்துமாறு தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


தேர்வுக் கட்டண விவரம்

ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ. 50/-

மதிப்பெண் சான்றிதழ் (முதலாமாண்டு) ரூ.100/-

மதிப்பெண் சான்றிதழ் (இரண்டாமாண்டு) ரூ.100/-

பதிவு மற்றும் சேவைக்கட்டணம் ரூ. 15/-

ஆன்லைன் பதிவுக் கட்டணம் (ஒரு விண்ணப்பத்திற்கு ) ரூ. 50/-


தேர்வுக் கட்டணம் செலுத்த மற்றும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய நாட்கள்: 25.08.2020 முதல் 27.08.2020 வரை


சிறப்பு அனுமதித் திட்டம்

25.08.2020 முதல் 27.08.2020 வரையிலான தேதிகளில் செப்டம்பர் 2020 தேர்விற்கு விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் 28.08.2020 மற்றும் 29.08.2020 ஆகிய தேதிகளில் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

(சிறப்பு அனுமதிக் கட்டணம் - ரூ.1000/-)


தகுதியற்றதேர்வர்களின் விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும்.


தபால் வழி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment