தமிழகத்தில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்!: அமைச்சர் பேட்டி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 30, 2020

தமிழகத்தில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்!: அமைச்சர் பேட்டி

 தமிழகத்தில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்!: அமைச்சர் பேட்டி


கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழகத்தில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேனி, திருப்பூர் மாவட்டங்களில் புதிய கால்நடை மருத்துவமனைகள் தொடங்கப்படும் என்று கூறினார். 

நாட்டு மாடுகளைப் பாதுகாக்கும் வகையிலும், நாட்டு இன நாய்களைப் பாதுகாக்கவும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர்  உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.


தற்போது கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழகத்தில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், தலைவாசலில் கால்நடை பூங்கா அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். 

கால்நடை மருத்துவத்துறைக்காக உலகத்தரம் வாய்ந்த கால்நடை பூங்கா தலைவாசல் பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. அதனுடைய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று கொண்டிக்கிறது. இதில், 70 சதவீதம் பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது எனவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment