முதுநிலை மருத்துவப்படிப்பில் அகில இந்திய தொகுப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்பக்கோரிய வழக்கு!: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பில் காலியாக இருக்கக்கூடிய இடங்களை நிரப்பக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
முதுநிலை மருத்துவப்படிப்பில் காலியாக இருக்கும் 3,373 இடங்களை நிரப்பக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில், அகில இந்திய தொகுப்பில் காலியாக உள்ள 3,373 மருத்துவ இடங்களை நீட் தேர்வு தகுதி அடிப்படையில் நிரப்பவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் உள்ள பயிற்சி வழக்கறிஞர் அகமது என்பவர் தான் இந்த வழக்கினை தாக்கல் செய்திருக்கிறார். இந்த வழக்கு அவசர வழக்காக வரும் 14ம் தேதி விசாரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.என். கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது.
கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பல்வேறு காரணங்கள் காரணமாக மத்திய அரசின் தொகுப்பில் இருக்கக்கூடிய முதுநிலை மருத்துவப் படிப்புகளில் கிட்டத்தட்ட 3,373 இடங்கள் காலியாக இருக்கிறது.
அவர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதி பட்டியலிலும் அவர்கள் பெயர்கள் இடம்பெற்று, பிறகு அவர்கள் அந்த படிப்புகளில் சேராமல் இருக்கின்றனர் என்பதை கண்டறிந்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு மிகமுக்கியமான ஒரு வழக்காக பார்க்கப்படுகிறது. வரும் 14ம் தேதி இந்த வழக்கின் விசாரணை நடைபெறவுள்ளது
No comments:
Post a Comment