கல்லூரி சேர்க்கை: சான்றிதழ் பதிவு நிறைவு
கலை, அறிவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைனில் சான்றிதழ் பதிவேற்றும் அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் படிப்பில் சேர்வதற்கான, மாணவர் சேர்க்கை, இந்த ஆண்டு முதல், ஆன்லைனில் நடத்தப்படுகிறது
.இதற்கான விண்ணப்ப பதிவு, ஜூலை, 20ல் துவங்கி, 31ல் முடிந்தது. விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றுவது, ஆக.,1ல் துவங்கியது; நேற்றுடன் முடிந்தது.இதையடுத்து, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, ஒவ்வொரு கல்லூரி வாரியாக, மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படும் என, உயர்கல்வி துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment