4 மாதம் சம்பளம் பாக்கி: பேராசிரியர்கள் அவதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, August 10, 2020

4 மாதம் சம்பளம் பாக்கி: பேராசிரியர்கள் அவதி

 4 மாதம் சம்பளம் பாக்கி: பேராசிரியர்கள் அவதி

கல்வியியல் கல்லூரிகளில், நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப் படாததால், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.


தமிழகம் முழுதும், 650க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், பி.எட்., -- எம்.எட்., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை படிக்கின்றனர்.

இன்னல்

இந்த கல்லுாரிகளில், 5,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் பணியாற்று கின்றனர்.

தற்போது, ஊரடங்கு அமலில் உள்ளதால், கல்லூரிகள் திறக்கப்படவில்லை.இறுதியாண்டு தவிர, மற்ற மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளும் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக, பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால், அவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.www.minnalkalviseithi.com 

இதுகுறித்து, பேராசிரியர்கள் கூறியதாவது:

ஊரடங்கால் கல்லுாரிகள் இயங்காததால், கல்லூரிகளுக்கான வாகனம் மற்றும் பராமரிப்பு செலவுகள் இல்லை.மேலும், மாணவர்கள் முன்கூட்டியே ஓர் ஆண்டுக்கான கட்டணத்தை செலுத்தி விட்டனர்.

 குறைவு

இதனால், கல்லூரிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படவில்லை. மாறாக செலவு தொகை குறைந்து உள்ளது. இருந்தும், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தினர் சம்பளம் தரவில்லை. 

இதுகுறித்து, தமிழக உயர்கல்வி துறையும், தமிழ்நாடு கல்வியியல் பல்கலை நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொண்டு, சம்பளம் வழங்கும்படி கல்லூரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment