நூலகம் சென்று படித்தாலே ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறலாம்:விவசாய கூலித்தொழிலாளியின் மகன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, August 10, 2020

நூலகம் சென்று படித்தாலே ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறலாம்:விவசாய கூலித்தொழிலாளியின் மகன்

 நூலகம் சென்று படித்தாலே ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறலாம்:விவசாய கூலித்தொழிலாளியின் மகன்

நூலகம் சென்று படித்தாலே ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறலாம்,'' என, சிவில் சர்வீஸ் தேர்வில், 119வது இடம் பிடித்த, விவசாய கூலித்தொழிலாளியின் மகன் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.


பொள்ளாச்சி அடுத்த மாரப்பகவுண்டன்புதுாரை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி முத்துமாணிக்கம். இவரது மகன் முருகானந்தம் திருச்சி அண்ணா பல்கலையில், 2013ம் ஆண்டு, பி.இ., (இ.இ.இ.,) படித்தார். 2013ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில் வெற்றி பெற்று, இளநிலை உதவியாளராக பணியாற்றினார்.


2019ல், குரூப் -- 2 தேர்வில் வெற்றி பெற்று, திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில், கூட்டுறவு துறையில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.


 தற்போது ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேசிய அளவில், 119வது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்


.முருகானந்தம், கூறியதாவது


:நான்காவது முயற்சியில், ஐ.ஏ.எஸ்.,க்கு தேர்வாகி உள்ளேன். சிவில் சர்வீஸ் தேர்வை தமிழ் வழியில் தேர்வு செய்து வெற்றி பெற்றுள்ளேன்.


விடாமுயற்சி, தகுந்த வழிகாட்டுதலால் வெற்றி பெற்றேன். நுாலக வாசிப்பே, எனது வெற்றிக்கு கைகொடுத்தது. சிவில் சர்வீஸ் என்றாலே ஆங்கிலத்தில் மட்டுமே படிக்க வேண்டுமென்ற எண்ணத்தால், பல அரசுப்பள்ளி மாணவர்கள் இத்தேர்வை எழுத தயங்குகின்றனர்.


அரசு பள்ளியில் படித்த நான், முதல்நிலை தேர்வை ஆங்கிலத்தில் எழுதி, முதன்மைத்தேர்வு, நேர்முகத்தேர்வை தமிழ் வழியிலேயே தேர்வு செய்து வெற்றி பெற்றேன்.


 நூலகங்களை பயன்படுத்தி, விடாமுயற்சியுடன் படித்தாலே, ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment