விருதுபெற்ற அரசு பள்ளி மாணவிக்கு CEO பாராட்டு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, August 28, 2020

விருதுபெற்ற அரசு பள்ளி மாணவிக்கு CEO பாராட்டு

 விருதுபெற்ற அரசு பள்ளி மாணவிக்கு CEO பாராட்டு

தனித் திறன் போட்டியில் விருது பெற்ற விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு சி.இ.ஓ., சான்றிதழ் வழங்கி பாராட்டினார்


விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்த சங்கர் மகள் கீர்த்தனா, 15; விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இம்மாணவி விளையாட்டு, பேச்சு, கட்டுரை, நாடகம், கவிதை உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்கி வருகின்றார்.

தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் அனைத்து வகையான அறிவுத்திறன் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வென்று வருகிறார். இவரது திறமையை பாராட்டி சென்னை அப்துல்கலாம் அறக்கட்டளை சார்பில் விருது வழங்கப்பட்டது.இதையடுத்து, மாணவி கீர்த்தனாவிற்கு, சி.இ.ஓ., முனுசாமி சால்வை அணிவித்தும், புத்தகங்களை வழங்கியும் பாராட்டினார்.

No comments:

Post a Comment