கல்வி உதவித்தொகை வழங்காமல் நிலுவை: வங்கி கணக்கை சரிபார்த்து அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, August 28, 2020

கல்வி உதவித்தொகை வழங்காமல் நிலுவை: வங்கி கணக்கை சரிபார்த்து அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

 கல்வி உதவித்தொகை வழங்காமல் நிலுவை: வங்கி கணக்கை சரிபார்த்து அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

எஸ்.சி., ~ எஸ்.டி., கல்வி உதவித்தொகை பெறாமல் உள்ள மாணவ, மாணவியரின் வங்கி கணக்கு விபரங்களை சரிபார்த்து அனுப்ப, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது, மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. 

சேலம் மாவட்டத்தில், கடந்த கல்வியாண்டில், 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 படித்த மாணவர்களில், பலருக்கும் கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. 

இதையடுத்து, ஆதி திராவிட நலத்துறை அலுவலகம் மூலம், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

 கடந்த, 2018 ~ 19, 2019 ~ 20 கல்வியாண்டில், 9 முதல், பிளஸ் 2 வரை படித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் வங்கி கணக்கு தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களுக்கு, நிலுவையில் உள்ளது. 

அந்த மாணவர்களின் சரியான வங்கி கணக்கு எண்ணை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பள்ளி தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க நேரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment