IIT மற்றும் IISC களில் பட்டமேற்படிப்பு படிக்க ஆகஸ்ட் 10 முதல் விண்ணப்பிக்க அழைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, August 8, 2020

IIT மற்றும் IISC களில் பட்டமேற்படிப்பு படிக்க ஆகஸ்ட் 10 முதல் விண்ணப்பிக்க அழைப்பு

 IIT மற்றும் IISC களில் பட்டமேற்படிப்பு படிக்க ஆகஸ்ட் 10 முதல் விண்ணப்பிக்க அழைப்பு

ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி-களில் பட்டமேற்படிப்பு படிக்க ஆகஸ்ட் 10 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 15ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 பட்ட மேற்படிப்பில் சேர்வதற்கு, ஜேஏஎம் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு 2021 பிப்ரவரி 14ல் நடைபெற உள்ளது.

எம்எஸ்சி, ஜாயின்ட் எம்எஸ்சி - பிஎஸ்சி உள்ளிட்ட பட்டமேற்படிப்புகளை படிப்பதற்கு இந்த தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமாகும். ஜேஏஎம் தேர்வு இரண்டு கட்டங்களாக நடக்கும். முதல் கட்டத்தில், உயிர் தொழில்நுட்பம், கணித அறிவியல் மற்றும் உயிரியல் படிப்புகளுக்கும், இரண்டாவது கட்டத்தில், வேதியியல், பொருளாதாரம், புவியியல் மற்றும் கணித படிப்புகளுக்கும் நடக்கும். தேர்வின் முடிவு மார்ச் 20 அன்று வெளியாகும்.

 ஆன்லைன் மூலம் மட்டுமே இந்த தேர்வு நடக்கும். இரண்டு தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். தேர்வர்கள் ஒரு தேர்விற்கு ரூ.1500, இரு தேர்வுகளுக்கு ரூ.2,100 கட்டணம் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment