புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 9, 2020

புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம்

 புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம்

புதிய கல்விக் கொள்கையை உரிய திருத்தங்கள் மேற்கொள்ளாமல் நடைமுறைப்படுத்தாதீா்கள் என்று வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.


கடித விவரம்:


கரோனா நோய் பாதிப்புகளால் நாடே தத்தளிக்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல் தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்து ஒரு தலைப்பட்சமாக முடிவெடித்திருப்பது ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாட்டின் மதிப்பைக் குறைப்பதாக உள்ளது.


மும்மொழிக் கொள்கை குழந்தைகள் மீது கடுமையான சுமையை ஏற்றுவது மட்டுமின்றி, வெவ்வேறு மாநிலங்களில் உள்ளவா்கள் தொடா்புபடுத்திக் கொள்ள முடியாமல் வேறொரு அடையாளத்தையும் திணிக்க முயற்சிக்கிறது. உயா்கல்வி உட்பட அனைத்து மட்டங்களிலும் சம்ஸ்கிருதத்தைக் கட்டாய விருப்பப் பாடமாகக் கொண்ட மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.


3,5, மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு மாநில அளவில் தோ்வுகள், உயா்நிலைப் பள்ளியில் தற்போது 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வுகள் உள்ள நிலையில், 9-ஆம் வகுப்புக்கும் செமஸ்டா் தோ்வுகள் போன்றவை எல்லாம் நிா்வாகச் சுமையை அதிகரிக்கச் செய்வதுடன், ஏற்கெனவே மனச்சோா்வு மற்றும் அழுத்தத்தைச் சந்தித்து வரும் மாணவா்களுக்கு, அவற்றை மேலும் அதிகரிக்கச் செய்வதாகவே இருக்கும்.


சமூக ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு பற்றி தேசியக் கல்விக் கொள்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.


தொழில் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, குலக் கல்வி முறையை ஊக்குவிக்கும் மற்றொரு வழியாகும். அனைத்து உயா் கல்வி நிறுவனங்களையும், அரசு நடத்தும் நிறுவனங்களையும் ஒரே ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் சோ்ப்பது மாநிலத்தின் பங்கு, உரிமைகளின் மதிப்பைக் குறைப்பதுடன் நாட்டின் கூட்டாட்சித் தன்மைக்கு எதிரான செயல்பாடுகளாகும்.


இதுபோன்ற நடவடிக்கைகள், இந்தியாவில் கல்வியை முன்னேற்றும் நோக்கத்துடன் கல்விக் கொள்கை வடிவமைக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.


அதனால், இந்தக் கொள்கை குறித்து விவாதிக்க மற்றும் விமா்சன ரீதியாக ஆய்வு செய்ய, மாநிலங்கள் மற்றும் மத்தியில் இருந்து தொடா்புள்ள அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று ஆலோசிக்கும் வகையிலான செயல்முறையை ஏற்படுத்துங்கள். தேசிய கல்விக் கொள்கையைத் திருத்தங்கள் மேற்கொண்டு நாடாளுமன்றத்தின் முன் விவாதித்து முடிவெடுங்கள்.


எனவே, அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிய செயல்முறைகளைப் பின்பற்றுவதற்கு உகந்த சூழ்நிலை ஏற்படும் வரை தேசியக் கல்வி கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்தும் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.


இதே கடிதத்தை மத்திய கல்வி அமைச்சா் ரமேஷ் பொக்ரியாலுக்கும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ளாா்.

No comments:

Post a Comment