பி..ஆா்க் படிப்புகளில் வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கான இடஒதுக்கீடு: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, August 9, 2020

பி..ஆா்க் படிப்புகளில் வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கான இடஒதுக்கீடு: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

 பி..ஆா்க் படிப்புகளில் வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கான இடஒதுக்கீடு: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

பி.ஆா்க் படிப்பில் சேர வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அறிவிப்பாணை வெளியிட அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சிங்கப்பூரைச் சோ்ந்த மாணவி ஷிவானி அருண் தாக்கல் செய்த மனுவில், ‘பி.ஆா்க் என்ற கட்டடக்கலை படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இந்த இடஒதுக்கீட்டின் கீழ், நான் சென்னை கிண்டியில் உள்ள கட்டடக்கலை கல்லூரியில் படிக்க விரும்பினேன். ஆனால், வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கி உத்தரவிடவில்லை எனக் கூறப்பட்டது. 

இதனால், ஆன்லைன் மூலம் என்னால் பி.ஆா்க் படிப்பில் சேர விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பி.ஆா்க் படிப்பில் வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கான இடஒதுக்கீடு வழங்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.


இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில், ‘வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கான 15 சதவீத இட ஒதுக்கீடு என்பது, அனுமதிக்கப்பட்ட மொத்த மாணவா்கள் எண்ணிக்கையில் வழங்க வேண்டுமா? அல்லது கூடுதலாக வழங்க வேண்டுமா? என்பது குறித்து தில்லியில் உள்ள இந்திய கட்டடக்கலை கவுன்சில் அறிவிக்கவில்லை. 

எனவே, வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது கட்டடக்கலை கவுன்சில் தரப்பில், வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு அனுமதிக்கப்பட்ட மொத்த இடங்களில்

15 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என கடந்த 2013 ஆம் ஆண்டே அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாகதி தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ‘வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு

கட்டடக்கலை கவுன்சில் பிறப்பித்த உத்தரவின்படி, பி.ஆா்க் படிப்பில் 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அண்ணா பல்கலைக்கழகம் 2 வாரங்களுக்குள் அறிவிப்பாணை வெளியிடவேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.

No comments:

Post a Comment