அக்.1ம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் – தமிழக அரசு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, September 24, 2020

அக்.1ம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் – தமிழக அரசு

 அக்.1ம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் – தமிழக அரசு


விருப்பத்தின் பேரில் 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் டிவி வாயிலாகவும், தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் வாயிலாக நாள் ஒன்றுக்கு 3 வகுப்புகள் வரை மட்டுமே நடத்தக்கூடிய சூழல் நிலவுவதால், பாடத்திட்டங்கள் 40% வரை குறைக்கப்பட்டது


இருப்பினும், பள்ளிகளை திறக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக இருந்தது. குறிப்பாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முறையாக பாடம் நடத்த, ஆசிரியர்கள் நேரடியாக வகுப்புகள் நடத்த வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இந்த நிலையில், அக்டோபர் 1ம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


மாணவர்களின் விருப்பத்தின் பேரில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே செல்லலாம் என்றும் ஆசிரியர்களை குழுக்களாக பிரித்து வெவ்வேறு நாட்களில் பள்ளிக்கு வரவழைக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது


தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:* அக்.1ந் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி* 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் அக்.1ந்தேதி முதல் பள்ளிக்கு வர அனுமதி.


* அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வரலாம்.


* பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு மாணவர்கள் வர அனுமதி.


* கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே செல்லலாம்.


* ஆசிரியர்களை குழுக்களாக பிரித்து வெவ்வேறு நாட்களில் பள்ளிகளுக்கு வரவழைக்க அறிவுறுத்தல்


* ஒவ்வொரு ஆசிரியர் குழுவும் இரண்டு நாட்களுக்கு பள்ளிகளுக்கு வரும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment