10, 12-ம் வகுப்பு மறுதேர்வுகள் அக்.6-ல் தொடக்கம்: சிஐஎஸ்சிஇ அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, September 24, 2020

10, 12-ம் வகுப்பு மறுதேர்வுகள் அக்.6-ல் தொடக்கம்: சிஐஎஸ்சிஇ அறிவிப்பு

 10, 12-ம் வகுப்பு மறுதேர்வுகள் அக்.6-ல் தொடக்கம்: சிஐஎஸ்சிஇ அறிவிப்பு


10, 12-ம் வகுப்பு மறுதேர்வுகள் அக்.6-ம் தேதி தொடங்கப்படும் என்று சிஐஎஸ்சிஇ (இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில்) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ வாரியங்களில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள், கம்பார்ட்மெண்ட் எக்ஸாம் எனப்படும் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு 2020-ம் ஆண்டு பொதுத்தேர்வில் மாணவர்கள் 10-ம் வகுப்பில் 99.34 சதவீதத் தேர்ச்சியும் 12-ம் வகுப்பில் 96.84% தேர்ச்சியும் பெற்றனர்


இதில் கம்பார்ட்மெண்ட் பகுதியில் இருப்பவர்களுக்கான தேர்வுகள் அக்.6-ம் தேதி முதல் நடத்தப்படும் என்று சிஐஎஸ்சிஇ அறிவித்துள்ளது. அக்.6 முதல் 9-ம் தேதி வரை தேர்வு நடைபெறும். இதற்கான தேர்வு முடிவுகள் அக்.17-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வறையில் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, சானிடைசர் கொண்டு சென்று, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும். அதேநேரத்தில் கையுறைகளை விரும்பினால் மாணவர்கள் அணியலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஐசிஎஸ்இ 12-ம் வகுப்புக்கான தேர்வு நடந்து கொண்டிருந்தபோதே கரோனா வைரஸ் பரவல் நாட்டில் தொடங்கியதால், தேர்வுகள் நடத்தப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 10-ம் வகுப்புத் தேர்வும் நடத்தப்படவில்லை.இதைத் தொடர்ந்து ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பொதுத் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு மறுதேர்வுகள் செப்.22-ல் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment