ஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம்; அக்.15 வரை உயர்கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, September 24, 2020

ஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம்; அக்.15 வரை உயர்கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி

 ஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம்; அக்.15 வரை உயர்கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி


உயர் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம் கோரி அக்.15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.


திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளை உயர் கல்வி நிறுவனங்கள் தொடங்குவது குறித்து செப்.4-ம் தேதி யுஜிசி சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி ஜனவரி 2021-ம் ஆண்டுக்கான படிப்புகளை உயர் கல்வி நிறுவனங்கள் தொடங்கலாம். எனினும் அதற்கு முன்னதாக யுஜிசியிடம் இருந்து அங்கீகாரம் பெற வேண்டியது அவசியமாகும்.


இதற்கு அக்.15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''2020- 21 ஆம் கல்வியாண்டில் தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் கல்வி ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களும், யுஜிசியின் தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் கல்வி விதிமுறைகளின்படி தகுதி வாய்ந்த நிறுவனங்களும் அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கலாம்'' என்று கூறப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள், அவற்றுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்கும் பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கட்டுப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment