10, பிளஸ் 1, பிளஸ் 2 தனித் தேர்வு செப்டம்பர் 15ல் ஹால் டிக்கெட் வெளியீடு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, September 12, 2020

10, பிளஸ் 1, பிளஸ் 2 தனித் தேர்வு செப்டம்பர் 15ல் ஹால் டிக்கெட் வெளியீடு

10, பிளஸ் 1, பிளஸ் 2 தனித் தேர்வு செப்டம்பர் 15ல் ஹால் டிக்கெட் வெளியீடு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தனித் தேர்வுக்கான ஹால் டிக்கெட், நாளை மறுதினம் வெளியிடப்பட உள்ளது.

அரசு தேர்வுத் துறை இயக்குனர், உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தொடக்க கல்வி டிப்ளமா முதலாம் ஆண்டுக்கு, வரும், 21ம் தேதி; இரண்டாம் ஆண்டுக்கு, 29ம் தேதியும் தேர்வுகள் நடக்க உள்ளன.

 அதேபோல், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கும், இந்த மாதம் துணைத் தேர்வு நடக்க உள்ளது.

இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பித்த அனைவரும், நாளை மறுதினம் பிற்பகல் முதல், www.dge.tn.gov.inஎன்ற, இணையதளத்தில், தங்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்.பிளஸ் 1 பொதுத் தேர்வு, மார்ச், 26ல் ரத்து செய்யப்பட்டதால், அந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்களும், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்ப எண் இல்லாமல், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள், மாவட்ட அரசு தேர்வு உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு சென்று, ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.பிளஸ் 1 அரியர் மற்றும் பிளஸ் 2 துணைத் தேர்வு என, இரண்டுக்கும் விண்ணப்பித்தவர்களுக்கு, ஒரே ஹால் டிக்கெட் வழங்கப்படும்..இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

அரசு தேர்வுத் துறை வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 1, பிளஸ் 2வில், எழுத்து தேர்வெழுதி, எழுத்து தேர்வு, அகமதிப்பீடு இரண்டிலும் சேர்த்து, 35 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றாலும், செய்முறை தேர்வில் பங்கேற்காததால் தேர்ச்சி பெறாதவர்கள், தற்போது செய்முறை தேர்வில் மட்டும் பங்கேற்க வேண்டும். அவ்வகை தேர்வர்கள், மீண்டும் எழுத்துத் தேர்வு எழுத வேண்டாம்

*எழுத்து தேர்வு, அகமதிப்பீடு ஆகிய இரண்டிலும் சேர்த்து, 35க்கும் குறைவான மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெறாதவர்கள், தற்போது எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு என இரண்டையும், கட்டாயம் எழுதவேண்டும்.

செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டியவர்கள், தியரி தேர்வுக்குமுன், தமக்கு ஒதுக்கப் பட்டு உள்ள தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரை அணுகி, செய்முறை தேர்வு தேதியை அறிந்து கொள்ள வேண்டும். ஹால் டிக்கெட் இல்லாதோர், தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்

.10ம் வகுப்பு

* பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், அறிவியல் செய்முறை தேர்வுக்கு வராத தனித் தேர்வர்கள்; தேர்வுக்கு வந்து குறைந்தபட்சம், 15 மதிப்பெண் பெறாதவர்கள், இந்த துணைத் தேர்வில், செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்


* அறிவியல் பாடத்தில் கருத்தியல், செய்முறை என, ஏதாவது ஒன்றில், தேர்ச்சி பெறாதவர்கள், தேர்ச்சி பெறாத ஒன்றில் மட்டும் பங்கேற்கலாம். ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மையத்திலேயே, வரும், 17, 18ம் தேதி செய்முறை தேர்வு நடத்தப்படும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment