வரும் 24ல் துவங்குகிறது அண்ணா பல்கலை தேர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, September 12, 2020

வரும் 24ல் துவங்குகிறது அண்ணா பல்கலை தேர்வு

வரும் 24ல் துவங்குகிறது அண்ணா பல்கலை தேர்வு

அண்ணா பல்கலை மாணவர்களுக்கு, இறுதியாண்டு கடைசி செமஸ்டர் தேர்வு, வரும், 24ம் தேதி துவங்குகிறது.

கொரோனா ஊரடங்கால், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், 2019 -- 20ம் கல்வியாண்டில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு நடத்தவிருந்த, கடைசி செமஸ்டர் தேர்வு தவிர, மற்ற மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.


தேர்வு ரத்தான மாணவர்களுக்கு, 'ஆல் பாஸ்' என்ற, அனைவருக்கும் தேர்ச்சி வழங்கி, தமிழக முதல்வர் இ.பி.எஸ்., அறிவிப்பு வெளியிட்டார்.

மேலும், ரத்தான தேர்வுகளில், முந்தைய அரியர் பாடங்களுக்காக விண்ணப்பித்தவர்களுக்கும் தேர்வை ரத்து செய்து, ஆல் பாஸ் செய்வதாக, முதல்வர் அறிவித்தார்.


அதற்கு, அண்ணா பல்கலையும், ஏ.ஐ.சி.டி.இ.,யும் எதிர்ப்பு தெரிவித்தன. 'அரியர் வைத்த மாணவர்களை, ஆல் பாஸ் செய்யக்கூடாது' என, ஏ.ஐ.சி.டி.இ., வலியுறுத்தியது.

இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வழக்கு தாக்கல் செய்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது

.இந்நிலையில், 2012ம் கல்வி ஆண்டிலிருந்து, இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்து, இறுதியாண்டு கடைசி தேர்வில், அரியர் வைத்த ஒவ்வொரு மாணவரும், தேர்வை மீண்டும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என, அண்ணா பல்கலை நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்த தேர்வு, 24ம் தேதி துவங்குகிறது; மாணவர்கள் தங்களது பெயர் மற்றும் பாடப்பிரிவு விபரங்களை, 15 முதல், 17ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது

.ஆன்லைன் வழியில் நடத்தப்படும் இந்த தேர்வில், புராஜக்ட் வாய்மொழி தேர்வு, 22ம் தேதியும், ஆன்லைன் வழி எழுத்து தேர்வு, 24ம் தேதியும் நடத்தப்படும்.

இறுதியாண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகளில், அரியர் உள்ளவர்கள், வரும், 15ம் தேதி முதல், 17ம் தேதிக்குள் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment