இன்று நீட் தேர்வு: முக கவசம் கட்டாயம்: முறைகேட்டை தடுக்க முன்னேற்பாடு தீவிரம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, September 12, 2020

இன்று நீட் தேர்வு: முக கவசம் கட்டாயம்: முறைகேட்டை தடுக்க முன்னேற்பாடு தீவிரம்

இன்று நீட் தேர்வு: முக கவசம் கட்டாயம்: முறைகேட்டை தடுக்க முன்னேற்பாடு தீவிரம்

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, இன்று நாடு முழுதும் நடக்கிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த ஆண்டுக்கான நீட் நுழைவு தேர்வு, கொரோனா பிரச்னையால், மே, 3ம் தேதியில் இருந்து தள்ளி வைக்கப்பட்டு, இன்று நடக்கிறது. இதற்காக, நாடு முழுதும், 3,843 மையங்கள் அமைக்கப் பட்டு உள்ளன. தேர்வு எழுத, 15.67 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், 14 லட்சம் பேர் தேர்வில்பங்கேற்கலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில், 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம், 1.17 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதில், ஒரு லட்சம் பேர் வரை பங்கேற்கலாம் என்று தெரிகிறது.முந்தைய ஆண்டுகளில் ஒரு தேர்வறையில், 24 மாணவ - மாணவியர் தேர்வெழுத அனுமதி வழங்கப் பட்டிருந்தது. இந்த முறை, கொரோனா பிரச்னையால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், ஒரு தேர்வறையில், 12 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

தேர்வு மையத்துக்கு வரும் போது, கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். கைகளை சானிடைசரால் துடைத்த பின், தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும்.தேர்வு மையத்துக்குள் செல்லும் போது, மாணவ - மாணவியரின் உடல் வெப்பநிலை, தானியங்கி கருவியால் பரிசோதிக்கப்படும். சராசரி வெப்பநிலையை விட அதிகமாக உள்ள மாணவ - மாணவி யரை, தனி அறையில் வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டை


தேர்வு மையத்துக்குள் மின்னணு கருவிகள், புத்த கங்கள் உட்பட வேறு எந்த பொருளும் அனுமதிக்கப்படாது. ஹால் டிக்கெட், அடையாள அட்டை போன்றவற்றை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்.முக கவசம் கட்டாயம் என்பதை, சில மாணவர்கள் தவறாக பயன்படுத்தி, தேர்வில் முறைகேட்டில் ஈடுபடாமல் தடுக்க, தேர்வு மையங்களில் முக கவசம் வழங்கவும், தேர்வு மைய அலுவலர்களுக்கு, தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment