பல்கலைக்கழக இறுதித் தேர்வு: அக்டோபர் 10 ஆம் தேதி வரை நீட்டிக்க அரசு கோரிக்கை
பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை இறுதித் தேர்வுகளுக்கான காலக்கெடுவை அக்டோபர் 10ஆம் தேதி வரை நீட்டிக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழுவை ஒடிசா மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கரோனா பாதிப்பால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை இறுதித் தேர்வுகளை செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க மாநில அரசுகளை பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக் கொண்டிருந்தது.
இந்நிலையில் ஒடிசா மாநில அரசு யூஜிசிக்கு புதன்கிழமை எழுதிய கடிதத்தில் அக்டோபர் 10 வரை பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டுத் தேர்வுகளை நடத்தும் காலக்கெடுவை நீட்டிக்கக் கோரியுள்ளது.
குறைந்தபட்சம் ஒரு நாள் இடைவெளியுடன் தேர்வுகளை திட்டமிடுவதை உறுதி செய்ய ஒடிசா அரசு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வு மையங்களை முறையாக சுத்தப்படுத்த முடியும் என்று மாநில உயர் கல்வித் துறை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment