75 % மாணவர்களால் ஜே.இ.இ. தேர்வை எழுதமுடியவில்லை: முதல்வர் குற்றச்சாட்டு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, September 2, 2020

75 % மாணவர்களால் ஜே.இ.இ. தேர்வை எழுதமுடியவில்லை: முதல்வர் குற்றச்சாட்டு

 75 % மாணவர்களால் ஜே.இ.இ. தேர்வை எழுதமுடியவில்லை: முதல்வர் குற்றச்சாட்டு


மேற்குவங்கத்தில் 75 சதவிகித மாணவர்களால் ஜே.இ.இ. தேர்வை எழுத முடியவில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும்  (செவ்வாய்க் கிழமை) முதல் ஜே.இ.இ. தேர்வு நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.


இந்த நிலையில் மேற்குவங்கத்தில் 75 சதவிகித மாணவர்களால் நீட் தேர்வு எழுத முவியவில்லை என்று முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி,  மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு ஏதுவான அனைத்து ஏற்பாடுகளும் அரசு சார்பில் செய்யப்பட்டன. எனினும் 4,652 மாணவர்களில் 1,167 மாணவர்களே தேர்வை எழுதியுள்ளனர்.


செவ்வாய்க் கிழமை தேர்வு எழுதவேண்டிய மாணவர்களில் 75 சதவிகிதத்தினர் தேர்வு எழுதவரவில்லை. இதன் மூலம் மாணவர்கள் கரோனாவால் மிகப்பெரிய அச்சத்தினை சந்தித்து வருவது உறுதியாகிறது.


மற்ற மாநிலங்களில் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்திருந்தாலும், கரோனா பெருந்தொற்றின் காரணமாக 50 சதவிகிதத்திற்கும் அதிகமான மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வை எழுதவில்லை என்று மம்தா பானர்ஜி கூறினார்.


நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு முன்னதாகவே கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment