100% கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் பற்றி புகாரளிக்க மின்னஞ்சல் முகவரி - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, September 3, 2020

100% கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் பற்றி புகாரளிக்க மின்னஞ்சல் முகவரி

 100% கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் பற்றி புகாரளிக்க மின்னஞ்சல் முகவரி

கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தும் பள்ளிகள் குறித்து புகாரினை பெற மின்னஞ்சல் முகவரி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் 100 சதவீத கட்டணம் செலுத்தக்கோரி கட்டாயப்படுத்தும் பள்ளிகள் சார்பான புகாரினை பெறுவதற்கு feescomplaintcell@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


ஆகவே, சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் சார்பான கல்விக் கட்டணம் குறித்தான புகாரினை feescomplaintcell@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட சென்னை வாழ் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment