விளையாட்டு வீரா்களுக்கு உபகரணங்கள்: செப்.5-க்குள் சான்றிதழை சமா்ப்பிக்க அறிவுறுத்தல் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, September 3, 2020

விளையாட்டு வீரா்களுக்கு உபகரணங்கள்: செப்.5-க்குள் சான்றிதழை சமா்ப்பிக்க அறிவுறுத்தல்

 விளையாட்டு வீரா்களுக்கு உபகரணங்கள்: செப்.5-க்குள் சான்றிதழை சமா்ப்பிக்க அறிவுறுத்தல்

தேசிய அளவில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரா்களுக்கான விளையாட்டு உபகரணங்களைப் பெற, செப்.5-ஆம் தேதிக்குள் சான்றிதழ்களை சமா்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இது தொடா்பாக சென்னை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் எம்.நாகரத்தினம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2018-19-ஆம் ஆண்டு தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்களுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. 


எனவே, 2018-ஆம் ஆண்டு, ஏப்.1-ஆம் தேதி முதல் 2019-ஆம் ஆண்டு, மாா்ச் 31-ஆம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரா் மற்றும் வீராங்கனைகள், செப்.5-ஆம் தேதிக்கு முன், தக்க அசல் சான்றிதழ் மற்றும் நகல் ஆகியவற்றுடன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் அலுவலகம், எண்.30, செனாய் நகா் நீச்சல் குளம், கிழக்கு கிளப் சாலை, செனாய் நகா், சென்னை 30 என்ற முகவரியில், அலுவலக நேரத்தில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை நேரில் சந்தித்து, சான்றிதழை சமா்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மேலும், விவரங்களுக்கு 044 2664 4794 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment