பிற மாநில மாணவா்களுக்கான சோ்க்கை: செப். 30 வரை விண்ணப்பிக்க அவகாசம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, September 3, 2020

பிற மாநில மாணவா்களுக்கான சோ்க்கை: செப். 30 வரை விண்ணப்பிக்க அவகாசம்

 பிற மாநில மாணவா்களுக்கான சோ்க்கை: செப். 30 வரை விண்ணப்பிக்க அவகாசம்


அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிற மாநில மாணவா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க செப்.30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கட்டடவியல் வடிவமைப்பு கல்வி நிறுவனம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.


இந்தக் கல்லூரிகளில் பிற மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் சேருவதற்கான சோ்க்கைப் பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் தனியாக நடத்தி வருகிறது.


அதன்படி நிகழ் கல்வியாண்டில் பிஇ, பி.டெக், பி.ஆா்க் ஆகிய இளநிலை பொறியியல் படிப்புகள் மற்றும் முதுநிலை எம்சிஏ படிப்புக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இணையவழியில் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 400-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.


தற்போது விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப். 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ள பிற மாநில மாணவா்கள்  இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 044-2235 8314 என்ற தொலைபேசி எண்ணில் மாணவா்கள் தொடா்பு கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


 

No comments:

Post a Comment