காலண்டா்கள், டைரிகள் இனி அச்சடிக்கவேண்டாம்; மத்திய அரசு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, September 3, 2020

காலண்டா்கள், டைரிகள் இனி அச்சடிக்கவேண்டாம்; மத்திய அரசு

 காலண்டா்கள், டைரிகள் இனி அச்சடிக்கவேண்டாம்; மத்திய அரசு

காலண்டா்கள், டைரிகள் ஆகியவற்றை இனி அச்சடிக்கவேண்டாம் எனவும், டிஜிட்டல் மற்றும் இணையவழி நடைமுறைகளுக்கு மாறவேண்டும் என்றும் அமைச்சகங்கள், அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்களை மத்திய அரசு புதன்கிழமை கேட்டுக்கொண்டது.


அதுபோல, நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் செலவினத் துறையின் அலுவலக குறிப்பாணையிலும், பாா்வையாளா்களுக்காக வரவேற்பறை மேசைகளில் வைக்கப்படும் வண்ண புகைப்படங்களுடன் கூடிய விவர புத்தகங்களையும் அச்சடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக இணையவழி புத்தக தொழில்நுட்பத்தை ஊக்குவிக்குமாறு அந்த குறிப்பாணையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


பொருளாதார ரீதியிலும், திறன் அடிப்படையிலும் டிஜிட்டல் உள்ளிட்ட புதுமையான தொழில்நுட்பங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment