மதிப்பெண்களை உயர்த்த வசதியாக 12ம் வகுப்புக்கு இன்ப்ரூவ்மென்ட் தேர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, September 23, 2020

மதிப்பெண்களை உயர்த்த வசதியாக 12ம் வகுப்புக்கு இன்ப்ரூவ்மென்ட் தேர்வு

 மதிப்பெண்களை உயர்த்த வசதியாக 12ம் வகுப்புக்கு இன்ப்ரூவ்மென்ட் தேர்வு


சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த 12ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள வசதியாக இன்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுதலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.


 மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தில் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்புகளில் படித்த மாணவ மாணவியர்களுக்கான பொதுத் தேர்வு, கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.


 இருப்பினும், இந்த தேர்ச்சி அறிவிப்பில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் எடுத்து தோல்வி அடைந்த மாணவர்கள் திரும்ப தேர்வு எழுத வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.


இந்நிலையில், மேற்கண்ட தேர்ச்சி அறிவிப்பின்படி தேர்ச்சி பெற்ற 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது சிபிஎஸ்இ கூடுதலாக ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது.


 இதன்படி, 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவ மாணவ, மாணவியர் தங்கள் மதிப்பெண்களை அதிகரித்துக் கொள்ள விரும்பினால், அவர்கள் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுதலாம் என்று தெரிவித்துள்ளது.


 இதையடுத்து நாடு முழுவதும் மேற்கண்ட இன்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுத 9 ஆயிரத்து 424 மாணவ மாணவியர் பதிவு செய்துள்ளனர்.


 இந்த தேர்வில் மாணவ, மாணவியர் பெறும் மதிப்பெண்ணே இறுதியானது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.


நாடு முழுவதும் நீடித்து வரும் ஊரடங்கு காலத்துக்கு பிறகு தற்போது தான் சிபிஎஸ்இ தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக தேர்வு நேரடியாக நடக்க உள்ளது.


 அத்துடன் இம்ப்ரூவ்மென்ட் தேர்வும் நடக்கிறது. தோல்வி அடைந்தவர்களுக்கான தேர்வில் நாடு முழுவதும் 2 லட்சத்து 37 ஆயிரத்து 849 பேரும், பதிவு செய்துள்ளனர். 


இந்த தேர்வுகளுக்காக நாடு முழுவதும் 1,268 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் செப்டம்பர் 30ம் தேதி வரை நடக்கும்.

No comments:

Post a Comment