சமூக வலைதளங்களில் பரவிய போலி செய்திக்குறிப்பு பள்ளிகள் வரும் 14ம் தேதி திறப்பா? அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, September 5, 2020

சமூக வலைதளங்களில் பரவிய போலி செய்திக்குறிப்பு பள்ளிகள் வரும் 14ம் தேதி திறப்பா? அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு

 சமூக வலைதளங்களில் பரவிய போலி செய்திக்குறிப்பு பள்ளிகள் வரும் 14ம் தேதி திறப்பா? அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு

தமிழகம் முழுவதும் பள்ளிகள் வரும் 14ம் தேதி திறக்க உள்ளதாக சமூக வலை தளங்களில் போலி செய்திக்குறிப்பு வெளியானது. ஆனால், தமிழகத்தில் பள்ளி திறப்புக்கான சாத்தியக்கூறு தற்போது இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 

கொரோனா ஊரடங்கு நடைமுறையால் மார்ச் 25 முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்வு அறிவிப்புகளால் கடந்த 1ம் தேதி முதல் மக்கள் வழக்கம்போல் வெளியே சென்று வருகின்றனர்.

பள்ளி, கல்லூரிகளை தற்போது திறக்கும் எண்ணம் இல்லை என கல்வித்துறை, உயர்கல்வித்துறை கூறி வரும் நிலையில், நேற்று முதல் செய்தி வெளியீடு எண் 45 என்ற பெயரில் போலியான செய்திக்குறிப்பு சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

 அதில், தமிழகத்தில் செப்.14ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும். மாணவர்கள், ஆசிரியர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். திரையரங்குகள் அக்டோபர் 1ம் தேதி முதல் திறக்கப்படும்.


இருக்கைகள் சமூக இடைவெளி விட்டு இருக்க வேண்டும். தமிழகம் விரைவில் இயல்பான நிலைக்கு திரும்பும். கே.பழனிசாமி, தமிழ்நாடு முதலமைச்சர். வெளியீடு: இயக்குனர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை - 9 என பரவிவருகிறது.

 இதுகுறித்து செய்தித்துறை அதிகாரிகள் கூறுகையில்,

 ‘‘இது தவறான தகவல். செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டது போல் செப்.4 தேதியிட்டு வெளியிட்டுள்ளனர். தற்போது செய்தி வெளியீடு எண் 600ஐ கடந்தும், செய்திக்குறிப்பு எண் 199ஐ கடந்துள்ள நிலையில் எண் 45 எனவும், எழுத்துப்பிழையுடன் வெளியிட்டுள்ளனர்’’ என்றனர். 

இதுபற்றி ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேட்டதற்கு, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பள்ளிகள் திறப்புக்கான சாத்தியக்கூறு தற்போது இல்லை என்றார்.

No comments:

Post a Comment