செப்டெம்பர் 21 முதல் பள்ளிகளில் வழக்கமான வகுப்புகள் நடக்காது - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, September 20, 2020

செப்டெம்பர் 21 முதல் பள்ளிகளில் வழக்கமான வகுப்புகள் நடக்காது

 செப்டெம்பர் 21 முதல் பள்ளிகளில் வழக்கமான வகுப்புகள் நடக்காது


கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுவதால் செப்.21 முதல் பள்ளிகளில் வழக்கமான வகுப்புகளுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என மாநில அரசு அறிவித்துள்ளது.


 மாநிலம் முழுவதும் செப்.,21ல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி திறக்கப்படும். ஆனால் வழக்கமான வகுப்புகள் நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது


இது குறித்து பேசிய மாநில கல்வித்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சுரேஷ்குமார், ‛மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்ட 9, 10,11,12 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகள் நடக்காது.


 ஆனால், பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் சந்தேகங்களை போக்குவதற்காக இருப்பார்கள்.


ஆனால், வழக்கமான வகுப்புகள் நடக்காது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் 10 லட்சம் புதிய மாணவர்கள் பள்ளியில் சேர்வார்கள். 


இந்தாண்டு கொரோனா அச்சம் காரணமாக செப்., மாதம் இறுதியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்' இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment