அரசு பள்ளிக்கு 'ஓ' போடுங்க... மாணவர் எண்ணிக்கையில் இரட்டை சதம் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, September 20, 2020

அரசு பள்ளிக்கு 'ஓ' போடுங்க... மாணவர் எண்ணிக்கையில் இரட்டை சதம்

 அரசு பள்ளிக்கு 'ஓ' போடுங்க... மாணவர் எண்ணிக்கையில் இரட்டை சதம்


அவிநாசி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர் எண்ணிக்கை இரட்டைச்சதம் கண்டுள்ளது.


அவிநாசி, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்படுகிறது.


பள்ளியில், மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த, பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமி ஆசிரியர்கள், 'அகரம்' மக்கள் நல அமைப்பினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் என, பல்வேறு அமைப்பினர் முயற்சி மேற்கொண்டனர்.மாணவர் எண்ணிக்கை, படிப்படியாக உயர்ந்தது. 


கடந்த கல்வியாண்டில், 132 மாணவர்கள் கல்வி பயின்ற நிலையில், நடப்பாண்டு மாணவர் எண்ணிக்கை, இரட்டை சதம் கண்டுள்ளது.'


கொரோனா ஊரடங்கில் பள்ளி மூடப்பட்டிருந்தாலும், கல்வித்துறை அதிகாரிகள் வழிகாட்டுதலுடன் மாணவர் சேர்க்கை நடந்தது.சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான புதிய மாணவர்கள் பள்ளியில் இணைந்துள்ளனர். மாணவர் எண்ணிக்கை, 200 ஆக உயர்ந்துள்ளது,' என பள்ளி தலைமையாசிரியை கூறினார்.


பெற்றோர்கள் கூறுகையில், 'தனியார் பள்ளிகள் சூழ்ந்த நகரின் மையப் பகுதியில் உள்ள அரசு ஊராட்சி பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்வது, பாராட்டுக்குரிய விஷயம்.


தற்போதைய சூழலில், இப்பள்ளியில், 3 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 200 மாணவர்களுக்கு, மூன்று ஆசிரியர்கள் கல்வி போதிப்பது சிரமமான காரியம். 


எனவே, கூடுதலாக, 3 ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. 


இந்த கட்டடத்தின் மேல் தளத்தில், கூடுதலாக இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டவும், எம்.எல்.ஏ., நிதி ஒதுக்க வேண்டும்.


மாணவர் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மூலம் மட்டுமே மாணவர்களை தக்கவைக்க முடியும்; பெற்றோரை திருப்திப்படுத்த முடியும்இவ்வாறு, அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment