தனியார் பள்ளிகள் போராட்டம் 'வாபஸ்' - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, September 20, 2020

தனியார் பள்ளிகள் போராட்டம் 'வாபஸ்'

 தனியார் பள்ளிகள்  போராட்டம் 'வாபஸ்'


மாற்று சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை, அரசு பள்ளியில் சேர்க்க கூடாது' என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பள்ளி கல்வி அலுவலக வளாகத்தில் நடத்தவிருந்த போராட்டத்தை, தனியார் பள்ளிகள் சங்கம், 'வாபஸ்' பெற்றுள்ளது. 


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும்சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கத்தின் சார்பில், சென்னை, பள்ளி கல்வி இயக்குனரக வளாகத்தில், இன்று காலையில், கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என, அமைப்பின் பொதுச்செயலர் நந்தகுமார் அறிவித்திருந்தார்.


 இந்நிலையில், பள்ளி கல்வி அதிகாரிகளுடன் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதாலும், பள்ளி நிர்வாகிகள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சென்னைக்கு வருவதில் சிக்கல் உள்ளதாலும்,போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment