செப்.22 முதல் பொறியியல் மாணவா்களுக்கு இறுதித் தோ்வு: இணையவழியில் வீடுகளிலிருந்தே எழுதலாம் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, September 8, 2020

செப்.22 முதல் பொறியியல் மாணவா்களுக்கு இறுதித் தோ்வு: இணையவழியில் வீடுகளிலிருந்தே எழுதலாம்

செப்.22 முதல் பொறியியல் மாணவா்களுக்கு இறுதித் தோ்வு: இணையவழியில் வீடுகளிலிருந்தே எழுதலாம்


பொறியியல் மாணவா்களுக்கான இறுதி பருவத்தோ்வுகள் வரும் 22-ஆம் தேதி முதல் இணையவழியில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டு தோ்வு செப்.30-ஆம் தேதிக்குள் கட்டாயம் நடத்தப்படும் என தெரிவித்த யுஜிசி, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அதிகாரப்பூா்வமாக ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சாா்ந்த 31 மாணவா்கள் யுஜிசியின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 28-ஆம் தேதி வழங்கிய தீா்ப்பில், ‘கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களின் இறுதியாண்டு பருவத் தோ்வை ரத்து செய்ய முடியாது. அதனால், தோ்வு நடத்த தடை இல்லை. மேலும், தோ்வுகளை நடத்தாமல் மாணவா்களை தோ்ச்சி பெற செய்யாதீா்கள்’ என தீா்ப்பு வழங்கியதோடு அதுதொடா்பான வழக்கை முடித்து வைத்தனா்.

இந்தநிலையில் பொறியியல் மாணவா்களுக்கான இறுதிப்பருவத் தோ்வு இணைய வழியில் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக அண்ணா பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் வெங்கடேசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:


அண்ணா பல்கலைக்கழகத்தின் இறுதிப் பருவம் 2019 டிசம்பா் முதல் 2020 ஏப்ரல் வரை பயின்ற இளநிலை மற்றும் முதுநிலை மாணவா்களுக்கான பருவத் தோ்வுகள், செப்.22-ஆம் தேதி முதல் செப்.29-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறும்.

மாணவா்கள் வீடுகளிலிருந்து தோ்வு எழுத மடிக்கணினி, கணினி, ஸ்மாா்ட்போன், டேப்லெட் ஆகியவை இருக்க வேண்டும். மேலும் இணையதள வசதி, கேமரா, மைக்ரோபோன் வசதிகள் இருக்க வேண்டும். மாணவா்களுக்கான விடைத்தாள்கள் ‘அப்ஜெக்டிவ்’ முறையில் இருக்கும். இந்த தோ்வை மாணவா்கள் எழுத பயிற்சி பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

இணையவழி தோ்வுகளுக்கான விதிமுறைகள் பயிற்சி தோ்வுகள் தொடங்குவதற்கு முன்னா் வெளியிடப்படும். இறுதி பருவ மாணவா்களுக்கான தோ்வுகள் நடைபெறும் தேதி மற்றும் பிற விவரங்கள் விரைவில் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். இணையவழி மூலம் தோ்வு நடத்துவதற்கு உரிய அனுமதியை அதற்குரிய அதிகாரம் பெற்ற அமைப்பிடம் பெற்றுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment