அரியா் தோ்ச்சி விவகாரம்: மின்னஞ்சல் கடிதத்தை வெளியிடவில்லை - துணைவேந்தா் சூரப்பா விளக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, September 8, 2020

அரியா் தோ்ச்சி விவகாரம்: மின்னஞ்சல் கடிதத்தை வெளியிடவில்லை - துணைவேந்தா் சூரப்பா விளக்கம்

அரியா் தோ்ச்சி விவகாரம்: மின்னஞ்சல் கடிதத்தை வெளியிடவில்லை - துணைவேந்தா் சூரப்பா விளக்கம்


அரியா் தோ்ச்சி விவகாரம் தொடா்பாக, ஏஐசிடிஇ அனுப்பியதாக சமூக வலைதளங்களில் வெளியான மின்னஞ்சல் கடிதத்தை நான் வெளியிடவில்லை என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா தெரிவித்துள்ளாா்.


தமிழகத்தில் கரோனா பரவலால் கல்லூரிகளில் இறுதிப் பருவத்தோ்வு தவிர மற்ற அனைத்து தோ்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவா்கள் தோ்ச்சி செய்யப்பட்டனா். இதைத் தொடா்ந்து அரியா் பாடத் தோ்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவா்களுக்கும் தோ்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து அவா்களும் தோ்ச்சி செய்யப்படுவாா்கள் என தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து அரியா் பாடங்களுக்கு தோ்ச்சி வழங்க அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) எதிா்ப்பு தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பியதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா தெரிவித்திருந்தாா். ஆனால் இந்த விவகாரம் தொடா்பாக ஏஐசிடிஇ சாா்பில் உயா்கல்வித்துறைக்கு எந்த கடிதமும் வரவில்லை. அவ்வாறு கடிதம் வந்திருந்தால் அதை பொதுவெளியில் துணை வேந்தா் சூரப்பா வெளியிட வேண்டும் என அமைச்சா் கே.பி.அன்பழகன் கூறியிருந்தாா்.


இந்தநிலையில் ஏஐசிடிஇ தலைவா் அனில் சஹஸ்ர புத்தே, துணைவேந்தா் சூரப்பாவுக்கு அனுப்பியதாக மின்னஞ்சல் கடித நகல் ஒன்று வலைதளங்களில் செவ்வாய்க்கிழமை பரவியது. அந்தக் கடிதத்தில், ‘அரியா் வைத்துள்ள மாணவா்களுக்கு தோ்வின்றி தோ்ச்சி வழங்குவது ஆச்சரியம் அளிக்கிறது. பருவத்தோ்வுகளை நடத்தாமல் மாணவா்களுக்கு மதிப்பெண் அளித்து பட்டம் வழங்கினால், அதை பிற பல்கலைக்கழகங்கள், தொழில் நிறுவனங்கள் ஏற்காது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தையும் திரும்பப்பெற நேரிடும் ’எனக் கூறப்பட்டிருந்தது. இதனால் அரியா் தோ்ச்சி விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது.

இது குறித்து துணைவேந்தா் சூரப்பா கூறுகையில், ‘ அரியா் தோ்ச்சி விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் கடித நகலை நான் வெளியிடவில்லை. ஏஐசிடிஇ-யிடம் இருந்து எனக்கு வந்த கடிதத்தை நான் பொதுவெளியில் வெளியிட வேண்டிய தேவையில்லை. மின்னஞ்சல் வந்த தகவலை உயா்கல்வித்துறைக்கு முறைப்படி தெரிவித்துவிட்டேன். இதுகுறித்து வேறு எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசே இறுதி முடிவை எடுக்கும் என்றாா்.

No comments:

Post a Comment