காலியாக உள்ள அரசு பணியிடங்கள் அடுத்த 3 மாதங்களில் நிரப்பப்படும்:இம்மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, September 18, 2020

காலியாக உள்ள அரசு பணியிடங்கள் அடுத்த 3 மாதங்களில் நிரப்பப்படும்:இம்மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு

 காலியாக உள்ள அரசு பணியிடங்கள் அடுத்த 3 மாதங்களில் நிரப்பப்படும்:இம்மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு



உத்தரப் பிரதேசத்தில் அடுத்த 3 மாதங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஊரடங்கால் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 


உத்தரப் பிரதேசத்தில் மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தீவிரமாக செயல்பட்டு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறார். சமீபத்தில் கோடிக்கணக்கானவர் களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் விதமான பல்வேறு திட்டங்களை துவங்கினார்.


உ.பி.,யின் அரசு பணிகளில் அடுத்த 3 மாதங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான முயற்சிகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.


 இது தொடர்பாக மாநில தலைநகரில் உள்ள லோக் பவனில், அனைத்து ஆள்சேர்ப்பு கமிஷன்களின் அதிகாரிகளுடனும், வாரியங்களுடனும் ஆலோசனை நடந்ததில், முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தின் அனைத்து துறை தலைவர்களுடன் கலந்தாலோசனை செய்து காலியாக உள்ள பதவிகளின் விபரங்களை கோரினார்.


இது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், இதுவரையில் 3 லட்சம் ஆள்சேர்ப்பு (காலி பணியிடங்களுக்காக) செய்யப்பட்டுள்ளன. 


இதே போல் அடுத்த 3 மாதங்களுக்குள் ஆட்சேர்ப்பு பணியை வெளிப்படையான முறையில் தொடங்கவும், அடுத்த ஆறு மாதங்களில் நியமனக் கடிதம் விநியோகிக்கப்படவும் வேண்டும். உ.பி., லோக் சேவா கமிஷன் வெளிப்படையான மற்றும் நியாயமான ஆட்சேர்ப்பை நடத்தியது போலவே, இதேபோன்று மற்ற ஆட்சேர்ப்புகளையும் முடிக்க வேண்டும். இதுவரை, 1,37,000 போலீஸ் பதவிகள் நிரப்பப்பட்டுள்ளன. 50,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற துறைகளில் ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.

1 comment: