தமிழகத்தில் 4 அரசு பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை: தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, September 16, 2020

தமிழகத்தில் 4 அரசு பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை: தேசிய ஆசிரியர் கல்வி குழுமம்

தமிழகத்தில் 4 அரசு பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை: தேசிய ஆசிரியர் கல்வி குழுமம்

தமிழகத்தில் 4 அரசு பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் தடை விதித்துள்ளது.

 விதிகளை பின்பற்றாத நிலையில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினாவில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி போதிய ஆவணங்களை சமர்பிக்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 புதுக்கோட்டை அரசு பி.எட் கல்லூரியில் 16 ஆசிரியருக்கு பதில் 12 ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 குமாரபாளையம் அரசு பி.எட் கல்லூரியில் 16 ஆசிரியருக்கு பதில் 9 ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.


திருமயம் அரசு பி.எட் கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் என்சிடிஇ விதிப்படி நியமிக்காததால் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment