மருத்துவ உயர் படிப்பில் ஓபிசியினருக்கான 50% இடஒதுக்கீட்டை பெறுவோம்: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, September 16, 2020

மருத்துவ உயர் படிப்பில் ஓபிசியினருக்கான 50% இடஒதுக்கீட்டை பெறுவோம்: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

மருத்துவ உயர் படிப்பில் ஓபிசியினருக்கான 50% இடஒதுக்கீட்டை பெறுவோம்: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

தமிழக சட்டப்பேரவையில் நேற்று திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு சிறப்பு கவன ஈர்ப்பு கொண்டு வந்து பேசியதாவது: மருத்துவ கல்வி உயர் படிப்பில் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது. அநீதி இழைத்து வருகிறது.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்க உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் திமுக ஆட்சியில் வழக்கு போடப்பட்டு வெற்றி கிடைத்தது. மத்திய அரசு தற்போது குழு அமைத்துள்ளது. அதில், தமிழக  பிரதிநிதியாக துறையின் செயலாளரை அனுப்பாமல் வேறொருவர் அனுப்பப்பட்டுள்ளார்.


 எனவே, துறை செயலாளரை பிரதிநிதியாக அனுப்ப வேண்டும். 50 சதவீதம் இடஒதுக்கீட்டை பெற்றுத்தர வேண்டும்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்:
திமுக ஆட்சியில் வழக்கு போடப்பட்டதாகவும், வெற்றி கிடைத்தாக சொல்வதை மறுக்கிறோம். நீங்கள் வழக்கில் இணைந்தீர்கள். மருத்துவ கல்வி உயர் படிப்பான எம்.டி., எம்.எஸ். போன்ற படிப்புகளில் 1,922 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

 அதில் 50 சதவீதம் மத்திய அரசின் இடஒதுக்கீட்டிற்கு சென்றுவிடும். மத்திய அரசு கமிட்டி அமைக்க நாமினி கேட்டனர்.

 சுகாதாரத்துறையில் நீண்ட காலமாக பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி அனுப்பப்பட்டுள்ளார். 50 சதவீதம் இடஒதுக்கீட்டை நிச்சயம் பெற அரசு நடவடிக்கை எடுக்கும்.

No comments:

Post a Comment