இந்தியாவில் 541 மருத்துவக் கல்லூரிகள் : மத்திய அமைச்சகம் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, September 19, 2020

இந்தியாவில் 541 மருத்துவக் கல்லூரிகள் : மத்திய அமைச்சகம்

 இந்தியாவில் 541 மருத்துவக் கல்லூரிகள் : மத்திய அமைச்சகம்நாடு முழுவதும் தற்போது 541 மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘


இந்தியா முழுவதும் தற்போது 541 மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. இதில் 280 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 261 தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஆகும்.


நாடு முழுவதும் உள்ள 541 மருத்துவக் கல்லூரிகளில் 80,312 இடங்கள் உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு 381 மருத்துவக் கல்லூரிகளில் 54,348 இடங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதில், அதிகபட்சமாக கர்நாடகத்தில் 60 கல்லூரிகள், உத்தர பிரதேசத்தில் 55 கல்லூரிகள் உள்ளன. மேலும் தமிழகத்தில் 26 அரசுக் கல்லூரிகள், 24 தனியார் கல்லூரிகள் உள்பட 50 கல்லூரிகள் உள்ளது என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment