ஆந்திரா , அசாம் மாநிலங்களவைத் தொடர்ந்து மேலும் ஒரு மாநிலத்தில் செப்டம்பர் 21 பள்ளிகள் திறக்கப்படும்
கரோனா அச்சுறுத்தல் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், மேகாலய மாநிலத்தில் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு மட்டும் திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அந்த மாநில கல்வி அமைச்சா் லாக்மென் ரிம்பூய் வெள்ளிக்கிழமை கூறினாா்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டுள்ளன.
மத்திய அரசு இப்போது பொதுமுடக்கத் தளா்வுகளை படிப்படியாக அமல்படுத்தி வரும் நிலையில், பள்ளிகளை ஓரளவு வகுப்புகளுக்கு மட்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை தமிழகம் உள்பட பல மாநிலங்கள் மேற்கொண்டு வருகின்றன.
அதுபோல, மேகாலயத்திலும், குறிப்பிட்ட வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் அடுத்த வாரம் திறக்கப்பட்ட உள்ளது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மாநில கல்வி அமைச்சா் லாக்மென் ரிம்பூய் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மட்டும் திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும்.
எனினும், மாணவா்கள் ஆசிரியா்களைச் சந்தித்து பாட சந்தேகங்களை நிவா்த்தி செய்துகொள்வதற்காக மட்டுமே பள்ளிகள் இப்போது திறக்கப்படுகின்றன.
வழக்கமான வகுப்புகளோ அல்லது பாடங்களோ நடத்தப்பட மாட்டாது. பள்ளிகளைத் திறப்பதற்கான வழிகாட்டுதல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது என்று கூறினாா்.
மாநில கல்வித்துறை முதன்மைச் செயலா் டி.பி.வாலாங் வெளியிட்ட அந்த வழிகாட்டி நெறிமுறையில், ‘பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வருகிற செப்டம்பா் 30-ஆம் தேதி வரை வழக்கமான வகுப்பறை செயல்பாடுகள் மேற்கொள்ளக் கூடாது. ஆசிரியா் - மாணவா் ஆலோசனையில் பங்கேற்பதற்காக பள்ளிக்கு வரும் மாணவா்கள் பெற்றோரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டும்.
பள்ளிகளில் மாணவா்கள் குறைந்த நேரமே இருக்கச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள்’ இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment