கொரானாவின் தாக்கம்: டீ மாஸ்டராக மாறிய பள்ளித் தலைமையாசிரியர் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, September 18, 2020

கொரானாவின் தாக்கம்: டீ மாஸ்டராக மாறிய பள்ளித் தலைமையாசிரியர்

 கொரானாவின் தாக்கம்: டீ மாஸ்டராக மாறிய பள்ளித் தலைமையாசிரியர்


கர்னூல்: ஏராளமான இளைஞர்களை நல்ல குடிமகன்களாக மாற்றிய பள்ளி தலைமை ஆசிரியர், இன்று வாழ்வாதாரத்தை தக்க வைத்துக் கொள்ள தேநீர் கடையை நடத்தி வருகிறார்.


இவரது வழிகாட்டுதலின்படி, தனியார் பள்ளி, அப்பகுதிலேயே தரம் வாய்ந்த பள்ளி என்ற பெயரைப் பெற்றது. அந்த பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும், பெற்றோரால் சிறந்த ஆசிரியர் என்ற பெயரைப் பெற்றனர். 


ஆனால், இன்று எஸ் வேணுகோபால் தனது குடும்பத்தை நடத்த சிறிய தேநீர் கடையை நடத்தி வருகிறார்


ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த வேணுகோபால், கரோனா பொது முடக்கத்தால் வேலை இழந்து, இன்று தனது குடும்பத்தை நடத்த தேசிய நெடுஞ்சாலை அருகே தேநீர் கடை வைத்துள்ளார்.


பிஎஸ்சி, பிஎட் முடித்துவிட்டு 1994ஆம் ஆண்டு ஆசிரியராக பணியைத் தொடங்கிய வேணுகோபால், தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியராக உயர்ந்தார். ஆனால் கரோனா பொது முடக்கத்தால் தனது பணியை இழந்து வறுமைக்குத் தள்ளப்பட்டார். அப்போதும் அவர் தன்னம்பிக்கையை இழந்துவிடவில்லை.


குடும்பத்தை வழிநடத்த ஏதேனும் தொழில் தொடங்கலாம் என்றால், அந்த அளவுக்கு கையில் பணமில்லை. எனவே, சிறிய முதலீட்டைப் போட்டு தேநீர் கடை வைத்தேன்.


 இதற்கே நண்பரிடம் இருந்து ஒரு லட்சம் கடன் வாங்கியுள்ளார் வேணுகோபால். தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.500 முதல் 600 வரை வருமானம் ஈட்டி தனது குடும்பத்தின் வறுமையை போக்கி வருகிறார். 


பள்ளி ஆசிரியராக இருந்து தற்போது டீ மாஸ்டராக மாறியிருக்கிறேன். ஆனால் நல்ல முறையில் சம்பாதித்து  மரியாதையுடன் வாழ வழி கிடைத்ததே என்று மகிழ்ச்சியே அடைகிறேன் என்கிறார் வேணுகோபால்.


இவரிடம் வந்து தேநீர் குடிப்பவர்களுக்கு இலவசமாக அறிவுரையும் கிடைக்கிறது. வேலை இழந்து கஷ்டப்படுபவர்கள், ஏதேனும் தொழில் தொடங்கி வருவாய் ஈட்டுமாறு அவர் வழிகாட்டி வருகிறார். 


ஒரு ஆசிரியர் எங்கு இருந்தாலும் ஆசிரியர் பணியை செய்வார் என்பதை வேணுகோபால் நிரூபித்து வருகிறார். விரைவில் பள்ளிகள் திறக்கப்பட்டு தனக்கு ஒரு வகுப்பறை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு மற்றவர்களுக்கு வழிகாட்டி வருகிறார்.

No comments:

Post a Comment