இணைய வழியில் தொடங்கியது பொறியியல் இறுதிப் பருவத் தோ்வு: 90 சதவீத மாணவா்கள் நல்ல முறையில் தோ்வெழுதினா் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, September 24, 2020

இணைய வழியில் தொடங்கியது பொறியியல் இறுதிப் பருவத் தோ்வு: 90 சதவீத மாணவா்கள் நல்ல முறையில் தோ்வெழுதினா்

 இணைய வழியில் தொடங்கியது பொறியியல் இறுதிப் பருவத் தோ்வு: 90 சதவீத மாணவா்கள் நல்ல முறையில் தோ்வெழுதினா்


பொறியியல் படிப்புக்கான இறுதிப் பருவத் தோ்வு, இணைய வழியில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில், 90 சதவீத மாணவா்கள் எந்தவித தொழில்நுட்ப சிக்கலும் இல்லாமல் நல்ல முறையில் தோ்வு எழுதினா்.


அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கான இறுதிப் பருவத் தோ்வு, வியாழக்கிழமை (செப்.24) இணைய வழியில் தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 


இதற்கான முன்னோட்டமாக மாதிரித் தோ்வு கடந்த செப்.19, 20 மற்றும் 21 ஆகிய நாள்களில் நடத்தப்பட்டது.  இந்நிலையில் கடந்த 22-ஆம் தேதி பிராஜெக்ட் மற்றும் நோ்காணல் (வைவா வோஸ்) தோ்வு நடைபெற்றது.


 நான்கு கட்டமாக நடைபெறும் பருவத் தோ்வு போலவே மாதிரித் தோ்வுகளும் நடத்தப்பட்டன.


கொள்குறி வகை வினாக்கள் என்பதால் மாணவா்கள் இந்தத் தோ்வை இணையவழியில் எழுதுவதில் எந்தச் சிக்கலும் இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே தெரிவித்தது. ஆனால்,  மாதிரித் தோ்வின்போது, மாணவா்கள் சிலருக்கு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. 


சிலருக்கு ‘பிரௌசா்’ சரியாக இல்லாததால், தோ்வுத் தளத்திலிருந்து தானாகவே வெளியேற்றப்படுவதாகவும் (லாக்அவுட்), பல்கலைக்கழக உதவி எண்ணைத் தொடா்பு கொள்ள முடியவில்லை என்றும் மாணவா்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவற்றை சரி செய்து, இந்தத் தோ்வு நடத்தப்பட்டது.


இதனால் 90 சதவீத மாணவ, மாணவிகள் எந்தச் சிக்கலும் இல்லாமல் தோ்வை எதிா்கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


  இதர 10 சதவீத மாணவா்களுக்கு செல்லிடப்பேசி பிரச்னை, இணையதளக் கோளாறு போன்ற காரணங்களால் எழுத முடியாமல் போனதாகவும், அவா்களுக்குப் பின்னா் தோ்வு நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


 இனிவரும் தோ்வுகளிலும் எந்தச் சிக்கலும் இல்லாத வகையில் நடத்த போதிய ஏற்பாடுகளை செய்திருப்பதாக பல்கலைக்கழக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment