இணைய வழியில் புதிய கல்வி கொள்கை கருத்து - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, September 24, 2020

இணைய வழியில் புதிய கல்வி கொள்கை கருத்து

 இணைய வழியில் புதிய  கல்வி கொள்கை கருத்து


மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கையை, தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக, பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்க, உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில், தனித்தனி நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


தமிழகத்திலுள்ள பல்கலை துணைவேந்தர்களிடம், உயர்கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா தலைமையில், நிபுணர் குழுவினர் இணைய வழியில் கருத்துக்களை கேட்டனர்.


பாரதியார் பல்கலை மற்றும் அதற்குட்பட்ட கல்லுாரிகளை சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், 25 மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைய வழியில் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் தெரிவித்த கருத்துக்களை, ஒருங்கிணைத்து அரசிடம் நிபுணர் குழு சமர்ப்பிக்க உள்ளது.

No comments:

Post a Comment