அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை : வரும் 28ல் இறுதிகட்ட கலந்தாய்வு  - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, September 24, 2020

அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை : வரும் 28ல் இறுதிகட்ட கலந்தாய்வு 

 அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை : வரும் 28ல் இறுதிகட்ட கலந்தாய்வு 


கோவை, அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இறுதி கட்ட கலந்தாய்வு வரும், 28, 29ம் தேதிகளில் நடக்கவுள்ளது.


கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் கூறியுள்ளதாவது:


அரசு கலைக் கல்லைரியில் உள்ள, 24 பாடப் பிரிவுகளில், 1433 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, அரசு விதிமுறையின் படி நடந்து வருகின்றது. தமிழக அரசு உயர் கல்வித்துறை அரசாணை எண், 69 படி கூடுதலாக, 20 விழுக்காடு இடங்களும் சேர்க்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.


இதில், நிரப்பப்படாத மீதமுள்ள இடங்களுக்கான இறுதி கட்ட கலந்தாய்வு வரும், 28, 29ம் தேதிகளில் நடக்கவுள்ளது. 28ல் மாணவ, மாணவிகள் நேரில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம். 


இதன் பிறகும், இடம் மீதமிருப்பின் 29ம் தேதியன்று நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். இக்கலந்தாய்வு, மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெறும்.


 குறைவான காலியிடங்களே இருப்பதால், பங்கேற்கும் அனைவருக்கும் இடம் கிடைக்கும் என உத்தரவாதம் கிடையாது. 


கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவியர் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment