ஐந்து நாள் விடுப்பு இன்றுடன் முடிகிறது:: நாளை முதல் 'ஆன்லைன்' வகுப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, September 24, 2020

ஐந்து நாள் விடுப்பு இன்றுடன் முடிகிறது:: நாளை முதல் 'ஆன்லைன்' வகுப்பு

 ஐந்து நாள் விடுப்பு இன்றுடன் முடிகிறது:: நாளை முதல் 'ஆன்லைன்' வகுப்பு


சென்னை:அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிக்கப்பட்ட விடுமுறை இன்று முடிகிறது. நாளை முதல் வழக்கம் போல, 'ஆன்லைன்' வகுப்புகள் துவங்க உள்ளன.


தமிழகம் முழுதும், மார்ச், 16 முதல் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனா நோய் தடுப்பு காரணமாக, புதிய கல்வி ஆண்டிலும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.


இந்நிலையில், தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளில், கல்வி, 'டிவி' வழியாக வகுப்புகள் நடக்கின்றன.பள்ளிகள் இல்லாமல் ஆன்லைனில் மட்டும் வகுப்புகள் நடத்துவதால், மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகி உள்ளதாக, அரசுக்கு புகார்கள் சென்றன. எனவே, செப்., 21 முதல், 25 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.


இந்த விடுப்பில், பள்ளிகள் தரப்பில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த, தடை விதிக்கப்பட்டது. ஐந்து நாள் விடுப்பு இன்று முடிகிறது.நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும், ஆன்லைன் வகுப்பை துவங்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment