இன்ஜினியரிங் கல்லூரி சேர்க்கை பழைய 'கட் ஆப்' வெளியீடு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, September 24, 2020

இன்ஜினியரிங் கல்லூரி சேர்க்கை பழைய 'கட் ஆப்' வெளியீடு

 இன்ஜினியரிங் கல்லூரி சேர்க்கை பழைய 'கட் ஆப்' வெளியீடு


இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான முந்தைய ஆண்டுகளின், 'கட் ஆப்' மதிப்பெண் பட்டியலை, தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.


அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும், இன்ஜினியரிங் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங், தமிழக உயர்கல்வி துறை சார்பில், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே நடத்தப்படுகிறது.


இதற்கான ஆன்லைன் பதிவு முடிந்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பும்,இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளை மறுநாள் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.இந்நிலையில், மாணவர்கள், தங்களுக்கு பிடித்த பாட பிரிவுகளையும், கல்லூரியையும் தேர்வு செய்வதற்கு தயாராகும் வகையில், முந்தைய ஆண்டுகளின், 'கட் ஆப்' மதிப்பெண் பட்டியலை, கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்டு உள்ளது.


அதில், முந்தைய ஆண்டுகளில், ஒவ்வொரு கல்லூரி மற்றும் பாடப் பிரிவிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்ட, 'கட் ஆப்' மதிப்பெண் விபரங்கள் இடம் பெற்றுள்ளன.


 இந்த விபரங்களை, www.tneaonline.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment