B.Ed ஆன்லைன் தேர்வு முறைகேடு தடுக்க குழு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, September 18, 2020

B.Ed ஆன்லைன் தேர்வு முறைகேடு தடுக்க குழு

 B.Ed ஆன்லைன் தேர்வு முறைகேடு தடுக்க குழு



பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட படிப்புகளில், ஆசிரியர் பல்கலை நடத்தும், ஆன்லைன் செமஸ்டர் தேர்வில், முறைகேடுகளை தடுக்க, துணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தலைமையில், கண்காணிப்பு மற்றும் உதவிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.


தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை மாணவர்களில், 2019- - 20ம் கல்வி ஆண்டில் இறுதி செமஸ்டர் எழுத வேண்டிய மாணவர்களுக்கு மட்டும், அந்த செமஸ்டர் தேர்வு வரும், 23ல், துவங்குகிறது.இந்த தேர்வு ஆன்லைன் வழியில் நடத்தப்படுகிறது.


தமிழக உயர்கல்வித் துறையின் வழிகாட்டுதலின் படி, மாணவர்கள் வீட்டில் இருந்தே தேர்வை எழுதி, விடைத்தாளை தபாலில் அனுப்பலாம் அல்லது ஆன்லைனில் பல்கலை முகவரிக்கு அனுப்பலாம்.


இந்த தேர்வுக்கான மாதிரி தேர்வு, நேற்று முன்தினம் ஆன்லைன் வழியே நடந்தது. பல மாணவர்கள் வீட்டில் இருந்து தேர்வை எழுதி, இணையதளம் வழியே கல்லுாரிகளுக்கு அனுப்பினர்.


இதில், பெரும்பாலானமாணவர்கள் புத்தகத்தைபார்த்து, அப்படியே பதில் எழுதியிருந்ததை, பேராசிரியர்கள் கண்டறிந்துள்ளனர். புத்தகத்தில் உள்ள வார்த்தைகள் மாறாமல், பல மாணவர்கள் விடை எழுதியுள்ளனர். 


இது குறித்து, பல கல்லுாரி பேராசிரியர்களும், முதல்வர்களும், பல்கலைக்கு புகார் அளித்துள்ளனர். அதனால், தேர்வில் மாணவர்கள் காப்பியடிக்காமல் தடுக்கும் வகையில், ஆன்லைன் வழியே கண்காணிப்பு பணியை மேற்கொள்ள, சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது.


துணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தலைமையில், ஆறு பேராசிரியர்கள் அடங்கிய குழு, ஆன்லைன் தேர்வை கண்காணிக்கும்; 


தேர்வின் போது, மாணவர்களுக்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், அவர்களுக்கு இந்த குழு உதவும் என, பல்கலை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment