இன்ஜினியரிங் செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, September 18, 2020

இன்ஜினியரிங் செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்

 இன்ஜினியரிங் செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கல்லூரிகளில், அரியர் உட்பட அனைத்து மாணவர்களுக்கான, இறுதி செமஸ்டர் தேர்வு, வரும், 26ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.


கொரோனா ஊரடங்கால் கல்லூரி மற்றும் பல்கலை மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 2019- - 20ம் கல்வி ஆண்டில், இறுதி ஆண்டு படித்த மாணவர்களுக்கு மட்டும், கடைசி செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார்.


மேலும், அனைத்து ஆண்டு அரியர் மாணவர்களுக்கும், தேர்வே இல்லாமல் தேர்ச்சி வழங்கி அரசு உத்தரவிட்டது. 


தேர்வு இன்றி தேர்ச்சி வழங்கினால், மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்பதால், முந்தைய கல்வி ஆண்டில், கடைசி செமஸ்டரில் அரியர் வைத்தவர்களும், தேர்வு எழுத வேண்டும் என, அண்ணா பல்கலை அறிவித்தது.


இதன்படி, நாளை மறுதினம், ஆன்லைன் வழி தேர்வு நடப்பதாக இருந்தது. இந்நிலையில், தேர்வு தேதி மாற்றப்பட்டு உள்ளது.


அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகள், உறுப்பு கல்லுாரிகள் மற்றும் இணைப்பு கல்லூரிகள் அனைத்திலும் படிக்கும் மாணவர்களுக்கு, 26ம் தேதி, ஆன்லைன் தேர்வு துவங்கும் என, புதிய தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment